ஞானசார தேரரை திருப்பி அனுப்பிய இந்தியா

281 0

gnanasara-theroஇலங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்த பொதுபால சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பௌத்த நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக சென்றிருந்த தேரரை, இந்தியாவுக்குள் நுழைய குடிவரவு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
அதற்கமைய அவர் நாடு திரும்பியுள்ளார்.

விசா பிரச்சினையே அதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இலங்கை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் வழங்கப்பட்டிருந்த இரட்டை நுழைவு விசா காலம் நிறைவடைந்திருந்தமையே இந்த சிக்கல் ஏற்பட காரணமாகியுள்ளது.