புகையிரதத்துடன் கார் மோதி விபத்து – ஐவர் பலி

586 0

02052016218வாதுவ-பொதுபிடிய புகையிரத கடவையில் புகையிரதம், கார் ஒன்றுடன் மோதி நேற்று மாலை விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் ஐவர் பலியாகினர்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் கார்ருடன் மோதியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் வைத்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.