‘குருவிக்காடு’ பிரதேசத்தை சுத்திகரிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்ப

314 0

யாழ்.சரசாலை ‘குருவிக்காடு’ பிரதேசத்தை சுத்திகரிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின. இயற்கையாக கண்டல் தாவரங்களுடன் அமைந்துள்ள குருவிக்காட்டில், விலங்குக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் ஆகியன தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வந்தன.

இந்நிலையில், சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் சுகாதாரத் திணைக்களம் இணைந்து சுத்தப்படுத்தும் வேலைத் திட்டத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளன.

குருவிக்காடு பிரதேசத்தை “மக்களுக்கான சமுதாயக் காடு” என சாவகச்சேரி பிரதேச சபையின் கடந்த அமர்வில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

வருடம்தோறும் பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டுப் பறவையினங்கள் வந்து செல்கின்ற ஓர் இடமாகவும் இந்தக் குருவிக்காடு அமைந்து காணப்படுகின்றது.

இதேநேரத்தில், குருவிக் காட்டில் உள்ளூர்ப் பறவையினங்கள், முதலைகள், நரிகள் போன்றனவும் வசித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.