தமிழ் மக்களின் விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக இன்று உலகெங்கிலும் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக மாவீரர்நாள் அனுஷ்ட்டிக்கப்பட்டது.
இன்று முல்லைத்தீவில் முல்லை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் பீற்றர் இளஞ்செழியன் தலைமையில் மாலை 6.5 மணியளவில் முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வைத்திய கலாநிதி சிவமோகன் மாவீரர்களுக்கான பிரதான சுடரினை ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தினார்.அத்தோடு கடலில் காவியமான மாவீரர்களுக்கு கடலிலும் சுடர் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் பெருமளவிலான மக்கள் உணர்வெளிச்சியுடன் கலந்து கொண்டனர்.