புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வன்னி விளாங்குள மாவீரர் துயிலுமில்லத்தில் சுடரேற்றப்பட்டது!

329 0

download-33புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வன்னி விளாங்குளம் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பொதுச்சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா ஏற்றிவைக்க, அங்கு திரண்டிருந்த மக்கள் ஈகைச் சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன், மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.