மதுவை ஒழிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் புற்றுநோய் தாக்கம் பற்றி தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்வது கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக, 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் மாணவர்களும் கூட மதுவுக்கு அடிமையாகும் கொடுமை தான் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோன்று புகையிலைப் பொருட்களின் விற்பனையும் கட்டுப்படுத்தப்படவில்லை. புற்றுநோய் இல்லாத தமிழகத்தை ஏற்படுத்தினால் தான் மக்கள் நிம்மதியாகவும், அச்சமின்றியும் வாழ முடியும். அத்தகைய நிலையை ஏற்படுத்த புகையையும், மதுவையும் ஒழிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.