மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள மாவீர்ர் நினைவிடத்திற்கு முன்பாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் மாலை 6.5 ற்கு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மாவீர்ர் நினைவிடம் மஞ்சள் சிவப்பு கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டுள்ள அதேவேளை, மலர் தூவி நினைவுச் சுடர்கள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் சிவில் உடையில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது