மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சின் தேசிய மின் செயற்பாடு தொடர்பான நடமாடும் சேவையொன்று இன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்டததினை நூறு வீதம் மின் வழங்கல் சேவைக்குள் உள்வாங்கும் பொருட்டு “இருள் நீங்கி நாடே ஒளியில்” என்ற தொனிப்பெருளில் இடம்பெற்ற இந் நடமாடும் சேவையில் ஒரே நாள் சேவை மற்றும் வவுனியா மக்கள் எதிர்கொள்ளும் மின்சார பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இந்நடமாடும் சேவை இடம்பெற்றிருந்தது.
இதன்போது மத்திய மின் சக்தி மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் அவ் அமைச்சின் செயலாளர் கலாநிதி பட்டகொட உட்பட மினசார சபையின் உயர் அதிகாரிகள் அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வவுனியா மாவட்ட மக்கள் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு தமது மின்சார பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள வருகை தந்திருந்ததுடன் மின்சார உபகரணங்கள் மற்றும் சூரிய சக்தி மின் கலங்கள் தொடர்பான விற்பனை கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.