கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்களும், தேசிய தலைவரை வாழ்த்தி சுவரொட்டிகளும் (படங்கள்)

378 0

kilinochchi-5கிளிநொச்சியில்  மாவீரர் நாள் வாசகங்கள் என்பன  எழுதப்பட்டும், தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகளும்  வீதியோரங்களில் இன்று  காணப்படுகின்றது.

நேற்று இரவு நேரம் விஸ்வமடுப்பகுதியில்  இனந்தெரியாத நபர்களினால் தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஐம்பதிற்கு  மேற்ப்பட்டவை ஏ-35 பாதையில்  வீசப்பட்டுள்ளது.

அத்துடன் வட்டக்கச்சி  சந்தையில் உள்ள  விளம்பரப்பலகையிலும் மற்றும் தார் வீதிகளிலும்   நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால்  மாவீரர்நாள் தொடர்பான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளது  என அங்கிருக்கும் எமது செய்தியாளர்  தெரிவித்துள்ளார்

kilinochchi-2 kilinochchi-4 kilinochchi-3 kilinochchi-1