பெருந்தொகை வௌ்ளியுடன் ட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

443 0

485355734untitled-127 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை வௌ்ளியை நாட்டுக்கு கொண்டுவர முற்பட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து வந்த இவரை சுங்கப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர் வசம் இருந்து 30 கிலோ கிராம் வௌ்ளி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இவர் மாவத்தகம பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.