சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியா என்ற கேள்விக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்தார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள். இன்றுடன் 68 வயது முடிவடைந்து 69-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி கட்சியினர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதிமுக சார்பில் மாநிலங்களவை சீட் கிடைக்காதது வருத்தமளிக்கிறதா என்ற நிருபர்களின் கேள்விக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் தேமுதிக கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். இப்போதைக்கு அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது. தேர்தலின்போது முடிவு எடுக்கப்படும்.
தேர்தல் நெருங்கும்போது செயற்குழு, பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும். தேமுதிகவிற்கு கிடைக்க வேண்டியது உரிய நேரத்தில் கிடைக்கும்.
விஜயகாந்த் இனி கிங் ஆக இருக்கவேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் எண்ணம். தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்கள், நிர்வாகிகள் எண்ணமாக உள்ளது.
டிசம்பர், ஜனவரியில் பொதுக்குழு, செயற்குழு கூட்டி முடிவெடுக்கப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.