காலமான கியூபாவின் முன்னாள் தலைவர் பிடல் கஸ்ரோவின் தகனக்கிரிகைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் கஸ்ரோ கொடிய சர்வாதிகாரியாக செயல்பட்டவர் என ட்ரம்பு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் தலைமைப்பொறுப்பை ஏற்கும் போது கியூபா ஜனநாயக ரீதியாக செயல்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த 1959ஆம் ஆண்டு கம்யூனிச புரட்சியின் பின்னர் கியூபாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
அன்று முதல், அமெரிக்க ஜனாதிபதிகளாக செயல்பட்ட ஐசனோவர், ஜோன் கெனடி, லிண்டன் ஜோன்சன், ரிச்சட் நிக்சன், ஜெரால் போட், ஜிம்மி காட்டர், ரொனால்ட் ரீகன், ஜோஜ் எச்.டபிள்யூ புஷ், ஜோஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன் ஆகியோரின் பதவிக்காலங்களில், கியுபாவின் தலைவராக செயல்பட்டார்.
சர்வதேச ரீதியாக 20ஆம் நூற்றாண்டில் அரச குடும்பத்தை சேராத ஒருவர் நீண்ட காலம் அரச நிர்வாகத்தை மேற்கொண்டவர் என்ற பெருமையைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கஸ்ரோ எந்த கட்டத்திலும், அமெரிக்காவின் விருப்பிற்கு கீழ்படியாதவராகவே செயல்பட்டு வந்தார்.
அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையே 1961ஆம் ஆண்டு ஏற்பட்ட் பனிப்போரை தொடர்ந்து கியூபாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலப்பகுதியில், கடந்த 2015ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் மீள ஸ்தாபிக்கப்பட்டது.
இதனிடையே, தலைநகர் ஹவானாவில் உள்ள தனியார் மயானத்தில் பிடல் கேஸ்ரேவின் உடல் தகனம் செய்யப்பட்டதன் பின்னர் அவரது, சாம்பல் தென் கிழக்கு நகரான சந்தியாகோவில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.