அலப்போவின் பெரும்பாலான பகுதிகள் அரச துருப்பினர் வசம்

282 0

1310ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரிய கிழக்கு அலப்போவின் பெரும்பாலான பகுதிகளை அரச துருப்பினர் மீள கைப்பற்றியுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அலப்போவில், இந்த இராணுவ நடவடிக்கைக்கு கடந்த 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதற்காக சிரிய அரசாங்கம் இரண்டு லட்சத்து 75 துருப்பினரை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந்த இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 212 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிருத்தானியாவில் நிலைகொண்டுள்ள மனித உரிமை அமைப்பொன்று உறுதி செய்துள்ளது.

பலியானவர்களில் 27 குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அலப்போ பிரதேசத்தில் சிரிய துருப்பினருக்கு கிடைத்த வெற்றியானது, கடந்த ஆறரை வருட காலமாக இடம்பெறும் யுத்தத்தில், சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாட்டிற்கு கிடைத்த பாரிய வெற்றி என கருதப்படுகிறது.