எம்பிலிப்பிட்டிய – சிலுமிணகம பிரதேசத்தில் 48 கிலோ கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த ஒருவர், காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 30 வயதானவர் எனவும் அவர் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.