இலங்கையை காப்பாற்றுங்கள், ட்ரம்பிடம் கோரும் மைத்திரி

297 0

625-500-560-350-160-300-053-800-900-160-90இலங்கையை, மனித உரிமைகள் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

நேற்று காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இதனை தெரிவித்தார்.

எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கடந்த தினத்தில், அமெரிக்காவிற்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பியுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு விசேடமாக முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டை வலுவிழக்க செய்து அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து முன்வைத்துள்ள யோசனையை டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பவுள்ளேன்.

அத்துடன், விசேட தூதுக்குழுவொன்றையும் அனுப்பி, இது தொடர்பில் கலந்து உரையாடி எமது நாட்டை இந்தவிடயத்தில் இருந்து முற்றாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.