சுதந்திர கட்சியை வீழ்ச்சியில் இருந்து காப்பற்றியது மைத்திரியே – மகிந்த அமரவீர

279 0

160821132641_srilankan_mininster_640x360_bbc_nocreditமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தவிர்ந்த ஏனையவர்கள் ஜனாதிபதியாகியிருந்தால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு மீள முடியாத வீழ்சியை சந்தித்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா கட்சியின் பொது செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தோல்வியடைந்த பொழுதுபளை விட இந்த முறை கட்சியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.