ராமேஸ்வரத்திற்கு கள்ளத்தோணியில் வந்தவர் கைது

318 0

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கள்ளத்தோணியில் வந்த அமல்ராஜ், மற்றும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மெக்கானிக் அருள்டிக்சனையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் 29. இவர் ஆக.17 ல் கள்ள தோணியில் இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வந்தார். பின் அங்கிருந்து ஒரு சிறுவனுடன் டூவீலரில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி சென்றார்.

அங்கு இலங்கைக்கு கஞ்சா கடத்திய வழக்கில்தொடர்புடைய பரிமளதாஸ் நடத்தும் இறால் பண்ணையில் காவலாளியாக மூன்று நாட்கள் வேலை பார்த்தார். அவரை பரிமளதாஸ் தனது மனைவியின் தம்பியான ஏ.சி., மெக்கானிக் அருள் டிக்சன் வீட்டில் தங்க வைத்தார்.

ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் அமல்ராஜ், அவருக்கு அடைக்கலம் கொடுத்த அருள் டிக்சன் ஆகியோரை கைது செய்தனர்.கைதான அமல்ராஜ் பெற்றோர் விழுப்புரம் மாவட்ட அகதிகள் முகாமிலும், மனைவி பரூனிக்கா 25, வேலுார் முகாமில் அவரது பெற்றோருடன் உள்ளார். அபிஷா என்ற 9 மாத பெண் குழந்தையும் உள்ளது.