30 கிலோ வெள்ளியுடன் ஒருவர் கைது

294 0

76சட்டவிரோதமாக டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 30 கிலோ கிராம் வெள்ளியுடன் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட வெள்ளியின் பொறுமதி 27 லட்சம் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரியவர் தமது பயண பொதியில் மிகவும் சூட்சமமான முறையில் அதனை மறைத்து கொண்டுவந்துள்ளார்.

மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான அவரிடம் சுங்க பிரிவினர் மேலதிக விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.