ரதன தேரரின் விகாரையில் பொலிஸார் சோதனையா?

334 0

அத்துரலியே ரதன தேரர் கடமையாற்றும் ராஜகிரிய சதஹம் சேவன விகாரைக்கு நேற்று மாலை பொலில் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

ரதன தேரருக்கு எதிராக மேற்கொண்ட புகாரை அடுத்தே கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அதிகாரி உட்பட பொலிஸ் குழுவினர் சென்றுள்ளனர்.

இருப்பினும், அந்த நேரத்தில் ரதன தேரர் விகாரையில் இருக்கவில்லை ஆனால் இன்று கலந்துரையாடலை மேற்கொள்ள ஒப்புக் கொண்டதாக தொலைபேசி மூலம் பொலிஸாருக்கு அறிவித்தார்.

ரதனா தேரரால் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டதாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் அருகே இடம்பெற்றதாக ஹூனுபிடிய சந்திரசிறி தேரர் புகாரில் தெரிவித் துள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு பின்புற கதவு வழியாக நுழைந்த ரதன தேரரின் வீடியோ சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.