பிரேமலதா மற்றும் சுதீஷ் மீதான, தே.மு.தி.க., வினரின் கோபம், சமூக வலைதளங்களில் வெளிப்பட துவங்கியுள்ளது.
சட்டசபை பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பின்ன டைவை சரி செய்ய, தஞ்சாவூர், திருப்பரங்குன் றம், அரவக்குறிச்சி ஆகிய, மூன்று தொகுதி தேர் தலில், தே.மு.தி.க.,தனித்து போட்டியிட்டது. கட்சி தலைவர், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் தீவிர பிரசாரம் செய்தனர். ஆனாலும், தே.மு.தி.க., படு தோல்வி யை தழுவியுள்ளது.
மூன்று தொகுதிகளிலும் சேர்த்து, 10 ஆயிரம்
ஓட்டுகளை கூட பெற முடியவில்லை.ஓட்டு சத வீதமும், இரண்டாக குறைந்துள்ளது. பா.ஜ., வுக்கு அடுத்த இடத்திற்கு, தே.மு.தி.க., தள்ளப்பட்டுள்ளது. கட்சியின் இந்தநிலைமைக்கு, பிரேமலதா மற்றும் சுதீஷே காரணம் என, நிர்வாகிகளும், தொண்டர் களும் கோபப்படு கின்றனர்.
இது குறித்து, சமூக வலைதளங்களிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட செயலர் வெங்கடேசன், தன் சமூக வலைதள பக்கத் தில், ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
அதில், ‘தோல்வியை நினைக்கும் போது மனம் குமுறுகிறது; நெஞ்சம் பதைக்கிறது.இதற்கெல்லாம் என்ன காரணம்’ என, கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு, ‘கட்சியின் பரிதாப நிலைக்கு, பிரேம லதா, சுதீஷ் தான் காரணம்’ என, பலர் பதில் கூறி இருந்த னர். சுதீஷிடம் உள்ள, இளைஞர் அணி செயலர் பதவியை,கட்சியில் துடிப்பான ஒருவருக்கு வழங்க வேண்டும் என்றும் கூறி யிருந்தனர். விஜயகாந்தின் வலைதள பக்கத் திலும், இதுபோன்ற பதிவுகளை பலர் செய்து உள்ளனர்.அவற்றை அழிக்கும் பணி, அரங்கேறி வருகிறது.
இந்த விமர்சனங்களுக்கு, விஜயகாந்த் பதில் கூறவில்லை. ஆனால், தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி, ‘தோல்விக்கு யாரையும் காரணமாக கூறக் கூடாது. கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி வருவது சகஜம்’ என்று கண்டித்துள்ளார்.