எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு அ.தி.மு.க… : சட்டசபை குழுக்கள் அமைக்க தீவிர ஆலோசனை

269 0

tamil_news_large_165741520161126231226_318_219தமிழக சட்டசபை குழுக்களை, உடனடியாக அமைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுப்பதால்,   குழுக்களை அமைப் பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.அரசு பணிகளை கண்காணிக்க, மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, பொது நிறுவனங் கள் குழு, சபை உரிமைக் குழு என, 12 குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இவற்றில், ஆளுங் கட்சி மற்றும் எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெறுவர்.

தனித்து போட்டி

பொது கணக்குக் குழுத் தலைவராக, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட வேண்டும். ,பொது வாக, ஆளுங்கட்சிகள், தங்கள் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரை, பொது கணக்குக் குழுத் தலைவராக நியமிப்பது வழக்கம்.

கடந்த சட்ட சபை தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டி யிட்டது; கூட்டணி கட்சியினரையும் அ.தி.மு.க., சின்னத்தில் நிற்க வைத்தது. இதன் காரணமாக, இம்முறை பொது கணக்குக் குழு தலைவர் பதவியை, தி.மு.க., வுக்கு தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவர்கள் அதிகளவில், குழுக்களில் இடம் பெற வாய்ப்பு உருவாகி உள்ளது. இதன் காரணமாக, சட்டசபை குழுக்களை அமைக்க, அரசு தயங்கி வந்தது.

இதையறிந்த, தி.மு.க., – காங்., – முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ.,க்கள், உடனடியாக,சட்டசபை குழுக் களை அமைக்க வேண்டும் என, சட்டசபை செயல ரிடம் மனு கொடுத்துள்ள னர். அரசு உரிய நடவடிக் கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் செல்ல, எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன. சட்டப்படி, சட்டசபை குழுக்களை அமைக்க வேண்டும் என்பதால், எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்திற்கு சென்றால், அரசுக்கு நெருக்கடி அதிகமாகும்.

விரைவில் அறிவிப்பு

இதை தவிர்க்க, பொது கணக்குக் குழு, மதிப்பீட் டுக் குழு தவிர, மற்ற குழுக்களை, உடனடியாக
அமைப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகி றது. எனவே, சட்டசபை குழுக்கள் அமைப்பது தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக, சட்டசபை செயலக
அதிகாரிகள் தெரிவித்தனர்.