சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 947ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் சென்னையில் இருந்து நாட்டுக்கு வந்தவர்க்ள எனவும், ஏனையவர்களில் ஒருவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில இருந்தும் மற்றையவர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் 138 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.