தலையில் முக்காடுடன் செய்தி வாசிக்கும் கனடாவின் முதல் பெண்மணி

357 0

201611261619408865_ginella-massa-becomes-canada-s-first-news-anchor-in-hijab_secvpfகிறிஸ்தவ மத சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கனடா நாட்டில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த செய்தித் தொகுப்பாளினி ஒருவர் தலையில் முக்காடுடன் செய்தி வாசித்து வருகிறார்.கிறிஸ்தவ மத சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கனடா நாட்டில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த செய்தித் தொகுப்பாளினி ஒருவர் அந்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக தொலைக்காட்சியில் தலைமுக்காடுடன் செய்தி வாசித்து வருகிறார்.

கடந்த 18-ம் தேதி அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சியான ‘சிட்டி நயூஸ்’ சேனலின் இரவு 11 மணி செய்தி ஒளிபரப்பின்போது கேமராக்களின் முன் முக்காடுடன் அமர்ந்து செய்தி வாசித்த தனது அனுபவத்தை ஜினெல்லா மாஸா என்ற அந்த 29 வயது பெண்மணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டொரன்டோ நகரில் வசித்து வரும் ஜினெல்லா கடந்த ஆண்டுதான் செய்தி தொகுப்பாளினி பணியில்  சேர்ந்தார். செய்திப்பிரிவின் தலைமை ஆசிரியர் தனக்கு அளித்துள்ள இந்த சுதந்திரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இவர் பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.