ஜனாதிபதி அமைச்சு பொறுப்பை வகிக்க முடியாது – சரத்பொன்சேகா

319 0

ஜனாதிபதி அமைச்சு பொறுப்பை வகிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இராணுவம் பலவீனப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா ஜனாதிபதி அமைச்சர் பதவியை வகிப்பது அரசமைப்பினை மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பாதுகாப்பு அமைச்சர் என்ற ஒருவர் இல்லாத நிலைகாணப்படுகின்றது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.அரசாங்கம் அரசமைப்பினை மாற்றினால் நாட்டின் நிலை வேறுமாதிரியாக காணப்படும் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.