2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் இன்றைய தினம் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சு தொடர்பிலான விவாதம் இடம்பெற்றது.
அதற்கமைய இன்றையதினம் முன்னாள் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்திற்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விசேடமாக கடந்த அரசாங்கத்தின் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சரான விமல் வீரவன்ச இந்த விவாதத்தில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். எனினும் இந்த நாட்களில் கடுமையாக மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலையில் அவர் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சி உறுப்பினர்களினால் அவரது வீட்டில் இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கூச்சலிடுகின்றமையினால் அவர் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்.
இளைஞரின் மரணத்திற்கு அதிக வயக்கரா பெற்றுக் கொண்டமையே காரணம் என மருத்து அறிக்கை ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த கொலை குற்றச்சாட்டு விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமையினுள் விமல் வீரவன்ச இந்த நாட்களில் சமூகத்திற்கு முகம் கொடுக்க முடியாத நிலைமையில் உள்ளதாகவும், அவர் நாடாளுமன்றத்தை தவிர்ப்பதற்கு காரணமும் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.