மணிவண்ணன் தனது நிலைப்பாட்டை இன்று பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார்

239 0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட வீ.மணிவண்ணன் தனது நிலைப்பாட்டை இன்று வெள்ளிக்கிழமை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார்.

கட்சித் தலைமையால் அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கான பதிலை அவர் நேற்று அனுப்பிவைத்ததாகத் தெரிகின்றது. அதுகுறித்து இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் மாநாடு ஒன்றைக் கூட்டி அவர் அறிவிக்கவுள்ளார்.