வவுனியாவில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆணின் சடலம் .!

258 0

வவுனியா பறயனாளங்குளம் பகுதியில் ஆணின் சடலமொன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது  தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வட   தமிழீழம் வவுனியா பறயனாளங்களத்தில் சுமார் (40 – 50) வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் காணப்படுவதாகவும் குறித்த நபர் அப்பகுதிக்கு பேரூந்தில் வந்து இறங்கியதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


எனினும் இதுவரையில் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என அடையாளம் காணப்படாத  நிலையில் அவரது உறவினர்கள் யாரேனும் அடையாளம் காண உதவுங்கள்.