மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு

244 0

நடைபெறப்போகும் மாகாண சபை தேர்தலில் நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தளை, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

;ஒவ்வொரு மாவட்டங்களின் களநிலைமைகளையும் தனித்தனியாக ஆராய்ந்து, தனித்தோ, ஐக்கிய மக்கள் சக்தியில் கூட்டணியாகவோ அல்லது வேறு நட்பு கட்சிகளுடன் கூட்டாகவோ தமுகூ களமிறங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.