சட்டவிரோத ஆயுதத் தொழிற்சாலை நீர்கொழும்பில் பொலிஸாரால் அதிரடியாக முற்றுகை; ஆயுதங்களும் மீட்பு

242 0

நீர்கொழும்பில் இயங்கிவந்த சட்டவிரோத ஆயுதத் தொழிற்சாலை ஒன்று இன்று காலை பொலிஸாரினால் அதிரடியாகச் சுற்றவளைக்கப்பட்டு அங்கிருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

றிவோல்வர் ஒன்று, உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று, பெருமளவு துப்பாக்கி ரவைகள், பொலிஸ் சீருடைகளை ஒத்த சீருடைகள் என்பன அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.