விபத்தில் காயமடைந்த இளைஞன் பலி!

244 0

முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மல்லாவி பகுதியைச் சேர்ந்த தாணுயன் (வயது-19) என்ற இளைஞரே நேற்று (18) உயிரிழந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.