எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிராமத்திற்கு வேலை செய்யவேண்டுமெனில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதனிடையே புதிதாக கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வதில் பலன் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.