கேகாலை சிறைச்சாலக்கு ஹெரோயின் எடுத்துச் சென்ற பெண் கைது

266 0

பின்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலவத்த பகுதியில் வைத்து கேகாலை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் எடுத்துச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 6 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது ஹெரோயின் விற்பனை மூலம் சம்பாதித்த 26,000 ரூபா பணம் மற்றும் 5 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டியாகும்புர பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பின்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.