சிறிலங்காவில் 128 போலி நாணயத்தாள்கள் கட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லேரியா, கல்வான பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5000 ரூபா நாணயத்தாளின் ஒரு பக்கத்தை மாத்திரம் அச்சிட்டுள்ளதுடன், அச்சிட்ட பக்கம் மாத்திரம் தெரியும் வண்ணம் நாணயத்தாள்களை ஒன்றின் மீது ஒன்றாக 128 கட்டுகளாக பிரித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜாஎல, அங்கொட மற்றும் முல்லேரியா பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.