படையினரை ஒருபோதும் கைவிடமாட்டோம்-சிறிலங்கா அரசாங்கம்

248 0

சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் அல்லது படையினரை காப்பாற்றுவதனை எக்காரணத்துக்காகவும் கைவிடமாட்டோமென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்கால நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக  தினேஸ் குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை நெருக்கடியான அல்லது  மகிழ்ச்சியான சந்தர்ப்பம் என எதுவாயினும்  அனைத்து நாடுகளுடனும் நட்புறவையே பேணும்.

மேலும் ஜனாதிபதியும் அணிசேரா பக்கச்சார்பற்ற நட்புறவை கொண்ட வெளிவிவகார கொள்கையைதான் அறிவித்துள்ளார். ஆகவேதான், எங்களுக்கு எதிரிகள் இல்லை. நண்பர்கள் மாத்திரமே உள்ளனர்.

இதனால்தான் உலகம் முழுவதும் இலங்கை  பெரும் மதிப்பை பெற்று விளங்குகின்றது.

எனினும் நாட்டின் இறைமையை பாதிக்கும் எந்ததொரு நடவடிக்கைக்கும் ஆதரவு வழங்க மாட்டோம். மேலும் படையினரை நிச்சயம் காப்பாற்றுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.