பலங்கொடை – வெலிகேபொல பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலைய கட்டத்தில் நேற்று இரவு 17 ஆம் திகதி திங்கட்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகேபொல பொலிஸ் நிலையத்தின் பெரக்கய என்று அழைக்கப் படும் கட்டடம் தீ விபத்தால் சேதமடைந்துள்ளது. குறித்த பகுதியிலுள்ள மக்கள், பலங்கொடை நகரசபை மற்றும் வெலிகே பொல பொலிஸார் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
மின் கசிவு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெலிகேபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.