இலங்கை முழுவதும் மின் தடைப்பட்டமைக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை நடத்துமாறு மின் சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மின் சக்தி அமைச்சின் செயலாளருக்கு இதுதொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த குழு இன்று காலை கூடவுள்ளது.ஒரு வாரத்தில் இந்த மின் தடை ஏற்பட்டதற்கான பின்னணி குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மின் சக்தி அமைச்சர் கோரியுள்ளார்.