களனி பல்கலைக்கழகம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பல்கலைக்கழகங்களும், வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அனைத்து துணை வேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக பிரிவு பணிப்பாளர், விஜயாநந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.