விதையனைத்தும் விருட்சமே குழுமத்தின் “பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற யாழ்ப்பாணத்தை நோக்கி” வேலைத் திட்டத்தின் முதல் கட்டமாக ஏ-9 வீதியில் கைதடிச் சந்திக்கும் சாவகச்சேரிக்கும் இடையில் வீதியோரம் வீசப்படிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் சமூகப்பணி சனிககிழமை (15) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 150 மூடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது என்றும், இது ஒரு கவலைக்குரிய விடயமாகும். இதனை பயணிகள் கவனம் எடுத்து செயற்பட்டால் பிரதான வீதியோரம் இவ்வாறு பெருமளவு கழிவுகள் பெருகுவதை குறைக்க முடியும் என்றும் இச் செயற்பாட்டை முன்னெடுத்த இளைஞர்கள் தெரிவித்தனர்.