எங்கள் மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரரை அத்துரலியே ரதன தேரர் கடத்திய தாக ஊடக செயலாளர் ஹுனுபிட்யே சந்திரசிரி தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதியை சந்திக்கச் செல்வதாகத் தெரிவித்து விமல திஸ்ஸ தேரரை ரதன தேரர் வரவழைத் தார் என்றும் அதன் பின்னர் கடத்தப்பட்டதாக என்றும் சந்திரசிரி தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அத்துரலியே ரதன தேரரின் வாகனத்தில் இவ்வாறு கடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.