இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இதன் போது பொதுமக்கள் பார்வைகூடம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல இதனை தெரிவித்தார்.
புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்ட பின்னரே பொதுமக்களை பாராளுமன்றத்திற்கு அனுமதிப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் தற்போது இணைய முறைமை ஊடாக தங்களது சுயதகவல்களை வழங்கியுள்ளதாகவும் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.