வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவ இரதோற்சவப் பெருவிழா இன்றாகும்(17).
ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராக ஸ்ரீ சண்முகப்பெருமானாக எழுந்தருளிய பெருந்தேரானது இழுக்கத் தொடங்கி மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்தது.
அடியவர்களின் வசதி கருதி இன்று(17) பிற்பகல் 2 மணிவரை சண்முகப்பெருமானை தரிசிக்க முடியும் என ஆலய தர்மகர்த்தா கூறியுள்ளார்.
கொரோனா சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக இம்முறை நல்லைக் கந்தன் தேரேறுவானா என்கிற பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் ஏக்கத்திற்கான முடிவாக கந்தன் தேரேறி சிறப்பாக சுற்றி வந்தான்.