சிறிலங்காவில் அரசியலை கைவிடுகிறார் ஞானசார தேரர்

292 0

சிறிலங்காவில் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாமல் இருக்க பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் முடிவெடுத்துள்ளார்.

ஆனால் பெளத்த தரிசனத்திற்காக முன்நிற்கும் அரசியல் தலைமைக்கு ஆதரவளிப்பதாகவும் ஞானசார தேரர் ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

இதேவேளை, இம்முறை நடந்த பொதுத்தேர்தலில் ஞானசார தேரரும், அத்துரலியே ரத்தன தேரரும் எங்கள் மக்கள் கட்சியின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டனர்.

ஆனால் அக்கட்சி தோல்வி அடைந்த போதிலும் தேசியப்பட்டியல் ஒன்று வழங்கப்பட்டது.

இந்த ஆசனத்தை பகிர்வதில் இரு தேரர்கள் இடையே கடும் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஞானசார தேரர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.