சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 893ஆக அதிகரித்துள்ளது.
ஓமனில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நால்வர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை இரண்டாயிரத்து 670பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டாயிரத்து 893 பேரில் இன்னும் 212 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
நாட்டில் வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது