ஸ்ரீலங்கா -கொழும்பில் நிலங்கள் தொடர்பில் விசாரணை

296 0

ஸ்ரீலங்கா -கொழும்பில் பலவந்தமாக கையகப்படுத்தும் நிலங்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓய்வு பெற்ற பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கமல் குணரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்பில் பெரும்பாலான இடங்களில் பலவந்தமாக மற்றும் மோசடி செய்து  நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே அவ்விடயம் தொடர்பாக முறையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பிரிவொன்று  விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

இதேவேளை போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவருமான கஞ்சிபானி இம்ரானுக்கு சிறைச்சாலைக்குள் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் சிறை அதிகாரி தொடர்பான காணொளி ஒன்றும்  கிடைக்கப்பெற்றுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.