தமிழ் மக்களின் விடியலுக்காக தம்முயிரை ஈகஞ்செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாளைக் குழப்புவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இராணுவத்தினரின் மாபெரும் களியாட்ட நிகழ்வு திடீரென ரத்துத் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மக்களால் மாவீரர் வாரம் அனுட்டிக்கப்படும் நிலையில், மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாவீரர் தினத்தைக் குழப்பும் வகையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலரும் பல்வேறு எதிர்க் கருத்துக்களைத் தெரிவித்துவந்தனர்.
இராணுவத்தினரால் குறித்த களியாட்ட நிகழ்வு வவுனியா வைரவர் புளியங்குள சிறுவர் பூங்காவில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
இதற்கு தமிழ் மக்கள் பலரும் தமது அதிருப்தியை வெளியிட்டுவந்தனர். இந்நிலையில் இன்றும் நாளையும் நடைபெறவிருந்த நிகழ்வானது, திடீரென நிறுத்தப்பட்டு, நேற்றைய தினம் நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த கொட்டகைகளை அகற்றியதுடன், படையினரும் அங்கிருந்து அகன்றுள்ளனர்.