நினைவுகூருகிறோம்
14 வது ஆண்டு நினைவு நாள்
முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில்
செஞ்சோலை வளாகத்தில் மாணவர்கள் மீது
சிறிலங்கா விமானப்படை நடத்திய கோரத்தாண்டவத்தில்
உயிர் நீத்த மாணவிகளின் நினைவேந்தல்
எத்தனையோ ஆசைகளை தங்கள் நெஞ்சில் சுமந்தபடி
விழி மூடிப்போன எமது தங்கைகளுக்காக
சிரமம் தாழ்த்தி அமைதி வணக்கம்.
செஞ்சோலைப் படுகொலை நினைவுகூறல் பேர்லின் தமிழாலயத்திலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நீதி மறுக்கப்படும் தமிழின அழிப்பிற்காக கண்ணீர் சிந்திய பல்லின மக்கள் – பேர்லினில் நடைபெற்ற செஞ்சோலை சிறார்களின் நினைவேந்தல்
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத பதிவாகிவிட்ட சம்பவம்.தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.14 ஆண்டுகள் கடந்து சென்றாலும் இப்படுகொலைக்கு நீதி கோரும் முகமாக யேர்மனியின் Gedächtniskirche தேவாலயத்திற்கு முன்பாக பேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மாதிரி கல்லறைகள் அமைக்கப்பட்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.அத்தோடு வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழ் இளையோர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
கொல்லப்பட்ட செஞ்சோலை சிறார்களின் படங்களை பார்வையிட்ட சில மக்கள் கண்ணீர் சிந்தியது குறிப்பிடத்தக்கது,
கொல்லப்பட்ட செஞ்சோலைச் சிறார்களுக்கு பேர்லின் தமிழாலயத்திலும் சுடர் ஏற்றப்பட்டது.