நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்து நடவடிக்கை எடுக்க விசேட குழு!

338 0

laxmankiriella-720x480கைது செய்யப்பட்டு நீண்டகாலம் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், சிறைச்சாலைகள், புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இடம்பெறும் கேள்வி நேரத்தின்போது ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 7 வருடங்களுக்கு அதிகமான மற்றும் நீண்காலமாக வழக்குத் தாக்கல் செய்யப்படாது தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல, எவ்வித வழக்குத் தாக்கலும் செய்யப்படாத நிலையில், நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.