முச்சக்கரவண்டி விபத்தொன்றில் 05 வயது குழந்தை பலி

328 0

கட்டுபொத, கல்வெவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்றில் 05 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கட்டுபொத நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று நாய் ஒன்று வீதியில் பாய்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் வந்த தனியார் பேருந்து ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, முச்சக்கரவண்டியின் பின்னால் அமர்ந்து சென்ற குழந்தை படுகாயம் அடைந்த நிலையில் கட்டுபொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 4 பேர் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டுபொத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.