சிறிலங்காவில் இரத்தினபுரி, கரங்கொட பிரதேசத்தில் சில ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து போர 12 ரக துப்பாக்கி, 04 தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.
23 வயதுடைய இளைஞர் ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (15) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.