சிறிலங்காவில் வீட்டுக் காவலில் உள்ளாரா ரதனசார தேரர்?

332 0

சிறிலங்காவில் அரம்பேபொல ரதனசார தேரர் வீட்டுக் காவலில் உள்ளதாக எங்கள் சக்தி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்

விகாரையின் மீது இனந்தெரியாத குழுவினரினால் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வெதினிகம விமல திஸ்ஸ தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய பட்டியல் ஆசனத்தை வென்ற எங்கள் சக்தி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை வீச்சுகளின் பரிமாற்றமாக தற்போது மாறியுள்ளது.

மேலும் நான் வசிக்கும் விகாரையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்தப்போதும் எந்ததொரு நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.

மேலும் எங்களது விகாரையில் வசித்து வந்த அரம்பேபொல ரதனசார தேரர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  அவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.